பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், அலரிமாளிகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பொன்று நடைபெற்றுகொண்டிருக்கின்றது.இந்த சந்திப்பின் போது, கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அந்த கூட்டத்திலிருந்து அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரும் வெளிநடப்பு செய்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டத்திலிருந்து வெளியேறிய போதிலும் அம்மூவரும் அலரிமாளிகையில் இருந்து இன்னும் வெளியேறவில்லையென, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

441 ShareLikeCommentShare