கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக
இராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.