நாட்டில் பாரிய உணவுப்பஞ்சம் ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மக்களுக்கு பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது. இதனை தவிர்க்க முடியாது.

அரசாங்கத்திடம் தெளிவான கொள்கைத்திட்டம் இல்லாதமையே இந்த நெருக்கடி நிலைமைக்கு காரணமாகும். இலங்கையில் அரிசி உற்பத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போனமையினால் இப்போது வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் இவர்கள் கூறிய கருத்துக்களையும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் பார்த்தால் இவர்களின் அப்போதைய திட்டம் என்ன என்பது தெரிந்திருக்கும்.

ஒரு பருக்கை அரிசியைக்கூட இறக்குமதி செய்யமாட்டோம் என கூறியவர்கள் இன்று ஒரு இலட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்கின்றனர்.

ஏனைய சகல பொருட்களினதும் விலை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இது தொடர்ந்தால் மக்களே ஆட்சியை கவிழ்க்கும் நிலை ஏற்படும் என்றார்.