தமிழ்நாடு பீரிமியர் லீக் ரி-20 தொடரின் 20ஆவது லீக் போட்டியில், மதுரை பந்தர்ஸ் அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

சென்னை சிதம்பரம் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மதுரை பந்தர்ஸ் அணியும் ஹைட்ரிம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைட்ரிம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மதுரை பந்தர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சத்துர்வேத் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் கௌசிக் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹைட்ரிம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் பந்துவீச்சில், கருப்புசாமி 2 விக்கெட்டுகளையும் மொஹமட் மற்றும் க்ரிஸ்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 185 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஹைட்ரிம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் அணியால், 17.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் மதுரை பந்தர்ஸ் அணி 81 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ராஜ்குமார் 42 ஓட்டங்களையும் மான் பஃப்னா 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மதுரை பந்தர்ஸ் அணியின் பந்துவீச்சில், சிலம்பரசன், கௌதம் மற்றும் அவுசிக் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜெகதீஸன் கௌசிக் மற்றும் ரொக்கி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 1 பவுண்ரி அடங்களாக ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சத்துர்வேத் தெரிவுசெய்யப்பட்டார்.