மனித நுகர்வுக்குத் தகுதியற்ற சீனியை வைத்திருந்த இருவரை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டையிலிருந்து கல்முனைக்கு கொண்டு செல்லப்பட்ட சீனித் தொகையே கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது மனித நுகர்வுக்குத் தகுதியற்ற சுமார் 200 சாக்கு சீனி பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.