மராக அம்­னோ­வின் துணைத் தலை­வர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் இன்று பிற்­ப­கல் 2.30 மணிக்­குப் பதவி ஏற்­பார் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மற்ற மாநி­ல மன்னர்களுடன் நேற்று கலந்­து­ரை­யா­டிய பிறகு மாமன்­னர் அப்­துல்லா அக­மது ஷா இதை உறுதி செய்­தார்.

“புதிய பிர­த­மர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளதை அடுத்து, மலே­சி­யா­வில் நில­வும் அர­சி­யல் நெருக்­கடி

முடி­வுக்கு வர வேண்­டும் என மாமன்­னர் விரும்­பு­கி­றார். குறு­கிய மனப்­பான்­மை­யு­டன் செயல்­ப­டா­மல், அர­சி­யல் லாபம் நாடா­மல் அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­றி­ணைந்து செயல்­பட வேண்­டும் என்று மாமன்­னர் தெரி­வித்­துள்­ளார்.

“நாட்­டின் நல­னை­யும் நாட்டு மக்­க­ளின் நல­னை­யும் கருத்­தில் கொண்டு கொவிட்-19 நெருக்­க­டி­நி­லையை எதிர்­கொள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஒற்­றுமை

யுடன் இருந்து செயல்­பட வேண்­டும் என்று மாமன்­னர் விருப்­பம் தெரி­வித்­துள்­ளார்.

“கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் நாட்­டின் பொரு­ளி­யல் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் மக்­கள் அவ­தி­யு­று­கின்­ற­னர் என்­றும் மாமன்­னர் நினை­வூட்­டு­கி­றார். எனவே, அர­சி­யல் நெருக்­க­டி­யில் இழு­பறி ஏற்­பட்டு அவர்

களுக்­குக் கூடு­தல் சிர­மத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என்று அவர் தெரி­வித்­துள்­ளார். பொது­மக்­க­ளுக்­குச் சேவை­யாற்­று­வ­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கடப்­பாடு கொண்­டி­ருக்க வேண்­டும் என்று

மாமன்­னர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்,” என்று மாமன்­ன­ரின் அரண்­மனை நேற்று மாலை வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று திரு முகை­தீன் யாசின் பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து வில­கி­ய­தும் மாமன்­ன­ரி­டம் திரு இஸ்­மா­யி­லின் பெயர் பரிந்­து­ரைக்­கப்­பட்­டது. திரு முகை­தீன் 18 மாதங்­க­ளுக்­குப் பிர­த­ம­ரா­கப் பதவி வகித்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

114 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 61 வயது திரு இஸ்­மா­யி­லுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்.

அவர்­களில் பலர் திரு முகை­தீ­னின் பெர்­சத்து கட்சி, பாஸ் கட்சி, சர­வாக் கபுங்­கான் கட்சி, அம்னோ ஆகிய கட்­சி­க­ளைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்பி னர்­கள்.

திரு இஸ்­மா­யில் பிர­த­ம­ரா­வ­தைத் தடுக்க கடைசி நேரத்­தில் எடுக்­கப்­பட்ட முயற்சி தோல்­வி­யில் முடிந்­தது.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு எதி­ராக அவர் நடை­மு­றைப்­ப­டுத்­திய திட்­டங்­கள் திருப்­தி­க­ர­மா­ன­தல்ல என்­றும் அத­னால் கொவிட்-19 பாதிப்பு மோச­ம­ட­டைந்­தி­ருக்­கிறது என்­றும் அதி­ருப்­திக் குரல்­கள் எழுந்­தன. அவர் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டக்­கூ­டாது என்று கோரிக்கை விடுக்­கும் மனு­வில் 333,000க்கும் மேற்­பட்­டோர் கையெ­ழுத்­திட்­ட­ன­யர்.