2022 முற்பகுதியில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், அரசியல் வாரிசுகளும் போட்டியிடவுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட மேலும் சில கட்சிகளின் சார்பிலேயே வாரிசுகள் களமிறங்குகின்றனர் எனவும் தற்போதிருந்தே அவர்கள் தேர்தலுக்கு தயாராகிவருகின்றனர் எனவும் தெரியவருகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். இராஜரட்னத்தின் மகன் ஜனா உட்பட மேலும் சில அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் மத்திய மாகாணத்தில் களமிறங்கவுள்ளனர்.

அதேவேளை, மேல், ஊவா, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலும் வாரிசு அரசியலுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

அதேவேளை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முக்கிய அரசியல் பிரமுகர்களும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.