இன்று ஆரம்பமாகவிருந்த ஸ்ரீ லங்கா கிரிக்கட்டினால் நடத்தப்படும் விசேட இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரின் இரண்டு போட்டிகளும் நாளை வரை பிற்போடப்பட்டுள்ளன.

கண்டி – பல்லேகலை மைதானத்தில் இன்றைய தினம் தொடரின் இரண்டு போட்டிகள் இடம்பெறவிருந்தன.

இந்தநிலையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் முதல் போட்டியில் தசுன் சானக்க தலைமையிலான எஸ்.எல்.சி கிரே அணியும், அசான் பிரியசஞ்சன் தலைமையிலான எஸ்.எல்.சி கிரீன் அணியும் மோதவிருந்தன.

அத்துடன் மற்றுமொரு போட்டியில் தனஞ்சய டி சில்வா தலைமையிலான எஸ்.எல்.சி புளு அணியும், தினேஸ் சந்திமால் தலைமையிலான எஸ்.எல்.சி ரெட்ஸ் அணியும் மோதவிருந்தமை குறிப்பிடத்தக்கது.