மாற்று தொழிற்சங்க அங்கத்தவர்கள், இனிவரும் காலங்களில் தங்களது பிரச்சினைகளை தங்களது தொழிற்சங்க காரியாலயத்திற்கு சென்று தீர்த்துக்கொள்ளுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது தொழிற்சங்க அங்கத்தவர்களுக்கு மாத்திரமே இனிமேல் முக்கியத்துவமளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.