உலகமெங்கும் கொரோனா இரண்டாம் அலை மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொற்று பாதிக்கப்பட்டு, சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சமூக வலைதள மூலம் பலரும் உதவி கேட்டு திண்டாடி வருகிறார்கள்.

தினசரி கொரோனா பாதிப்பு என்பது பல லட்சங்களை தாண்டி விட்டது. 40 வயதில் டூ பீஸில் போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகை.. ஒன்னொன்னும் ஒரு ரகம் என ஜொள்ளும் ஃபேன்ஸ்! மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பல உயிர்கள் இறந்து வருகின்றன. அதிலும் இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. நாள் ஒன்றிற்கு 2000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கிறார்கள். 

 மாலத்தீவில் பிரபலங்கள் உல்லாசம்இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் மாலத்தீவு சென்று, ஜாலியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதைப்பார்ப்பவர்கள், இங்கு மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையில், இவங்களுக்கு இது தேவையா..? என கருத்துக்கள் பதிவிட்டு கொந்தளித்து வருகிறார்கள். பாலிவுட் நடிகை ஆலியா பட், கொரோனா குணமான 4-வது நாளே தனது காதலன் ரன்பீர் கபூருடன் மாலத்தீவு சென்று புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.  

மாஸ்க் அணியாத பிரபலங்கள்சினிமா நடிகைகள் மட்டுமல்ல, சின்னத்திரை நடிகைகளும் தற்போது மாலத்தீவில் உல்லாசமாக இருப்பது போன்ற கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட துவங்கி விட்டனர். விதவிதமாக ஃபோட்டோஷூட் நடத்தி, அவற்றை ஃபோட்டோவாகவும், வீடியோவாகவும் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றன.

இவற்றில் பல ஃபோட்டோக்கள் வைரலாகி, லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வருகின்றன. இவர்கள் யாரும் மாஸ்க் கூட அணியாமல் தான் இருந்து வருகின்றனர்   கேள்வி கேட்கும் இணையவாசிகள்ஜான்வி கபூர் , சாரா அலி கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் அடிக்கடி சுற்றுலா புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இதைப்பார்த்து எரிச்சலடைந்த நெட்டிசன்கள் நீங்கள் எங்குவேண்டுமானாலும் செல்லுங்கள், அதை ஏன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறீர்கள் என்று காரசாரமாக கேள்வி கேட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

  வறுத்தெடுத்த ஸ்ருதிஹாசன்இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நேரம் இது. மாஸ்க் இல்லாமல் நீச்சல் குளத்தில் குளிக்கும் நேரமல்ல. நீங்கள் சவுகரியமாக இருந்தால் அதை உங்களுடனே வைத்துக்கொள்ளலாம். அதை மக்கள் முன் வெளிப்படுத்த தேவையில்லை. காரணம் அவர்கள் கஷ்டத்தில் உள்ளார்கள்” என்று கூறியுள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்த பேச்சிற்கு இணையதளவாசிகளும், மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.