இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று(திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

ஆக இன்று ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டியில் வெற்றிபெரும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.