மொட்டு கூட்டணிக்குள் மோதல் உக்கிரம்! 11 கட்சிகள் மேதினத்தில் தனிவழி


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 பங்காளிக்கட்சிகள் இணைந்து மே தின நிகழ்வுகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.

இதனால் பொதுஜன பெரமுன கட்சி கடுப்பில் உள்ளதுடன் அதன் கூட்டணி கட்சிகள் சில தனியே மே தின நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.


அதேவேளை, இதர கட்சிகளும், தொழிற்சங்கங்களும் மே தின நிகழ்வு மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு தயாராகிவருகின்றன.

கொரோனா வைரஸ் பரவவால் கடந்தவருடம் மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்க முடியாமல் போனது. சிறு அளவிலான நிகழ்வுகளே இடம்பெற்றன.


இந்நிலையில் இம்முறை மே தினத்தை உரிய வகையில் அனுஷ்டிப்பதென அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க பிரிவுகள் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் சுகாதார தரப்புகளுக்கு அறிவித்து அனுமதி பெறுவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், பேரணிக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே

எஸ் ஜே புஹாது