ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க நாளை மறுதினம் விடுதலை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 12ம் திகதி அனுஷ்டிக்கப்படும் இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வார் என தான் நம்புவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.