ரஷ்ய அவசர சூழ்நிலைகளுக்கான மந்திரி யெவ்ஜெனி ஜினிச்சேவ் (வயது 55), தண்ணீரில் தவறி விழுந்தவரை மீட்க போது மரணம் அடைந்தார்.

ரஷ்ய அவசர சூழ்நிலைகளுக்கான மந்திரி யெவ்ஜெனி ஜினிச்சேவ் (வயது 55), ஆர்க்டிக் பகுதியில் சிவில் பாதுகாப்பு மற்றும் இராணுவ பயிற்சியின்போது திடீரென மரணமடைந்தார் என்று ரஷ்ய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

 ‘ஆர்க்டிக் மண்டலத்தை அவசரக்காலத்தில் பாதுகாக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஆபத்தில் சிக்கிய ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் ஜினிச்சேவ் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறது.

அரசின் உதவியுடன் இயங்கும் ஆர்.டி செய்தியின் தலைமை ஆசிரியர் மார்கரிட்டா சிமோன்யான் கூறுகையில், தவறி தண்ணீரில் விழுந்த கேமராமேனை காப்பாற்றும் முயற்சியில் ஜினிச்சேவ் உயிரிழந்ததாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த சம்பவத்தின்போது பலர் அங்கு இருந்திருந்தாலும் என்ன நடந்ததென்று யாருக்கும் தெளிவாக தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஆர்.பி.சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

பாறையின் உச்சியிலிருந்து ஒரு கேமரா மேன் தவறிவிழுந்தபோது அவரை காப்பாற்றும் முயற்சியில் ஜினிச்சேவ்வும் தவறிவிழுந்ததாகவும், இதில் இருவருமே உயிரிழந்துவிட்டதாக கூறியிருக்கிறது. மேலும், ஜினிச்சேவ் ரஷ்ய அதிபர் புதினின் தனிப்பட்ட பாதுகாப்பு விவரங்களையும் அறிந்தவர் என கூறப்பட்டுள்ளது.