சிறுமி ஹிசாலியின் மரணம் சம்பந்தமாக சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் இன்று வழக்கு விசாணைக்கு வந்த போது. சந்தேக நபர்பளை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.

மூன்றாவது தடைவையாக அவர்கள் முன்வைத்த பிணை மனு நிராகரிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.