பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் சிறைக்கூடத்தில் இருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசியில் அரசாங்கத்தின் முக்கிய நபர்களுடன் அவர் உரையாடியமை தெரியவந்துள்ளது.

ரிஷாத் பதியுதீன் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் உள்நுழைந்த அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது கையடக்கத்தொலைபேசி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இந்த கையடக்கத் தொலைபேசியை ரிஷாத் பதியுதீனுக்கு வழங்கிய சிறை அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த கையடக்கத் தொலைபேசி தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட  பதியுதீன் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் உடன் தொடர்பு வைத்திருந்தாரா என்பது தொடர்பில் தொலைபேசியை வைத்து ஆராய்வதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் முயற்சி செய்தனர்.

இருந்த போதும் பதிவுதீன் தற்போதைய அரசாங்கத்தின் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அந்த தொலைபேசியில் உரையாடி உள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த தொலைபேசியை குற்றப்புலனாய்வு பிரிவின் உயரதிகாரி ஒருவர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

எனவே இந்த கையடக்க தொலைபேசி விவகாரம் விரைவில் காணாமல் போகக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

ரிஷாத் பதியுதீன் இரண்டு வழக்குகளில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.