வடமாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுவந்தார்.

அப்பதவியை துறந்து, ஆளுநர் பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதற்கான கடிதம், ஜனாதிபதி செயலாளரால் இவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.