பௌத்த சாசனத்திற்கு பிள்ளைகளை துறவறம் பூண வழங்கும் குடும்பங்களின் தேவைக்கு அமைய அரச தொழில் வாய்ப்புகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் வெடிவைத்தகல்லு கிராம சேவகப் பிரிவின் போகஸ்வெவ பாடசாலையில் நேற்று நடைபெற்ற கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சியின் 17வது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்பதால், சில பிக்குமார் தமது பௌத்த சாசன கடமையை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. ஒரு லட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பௌத்த சாசனத்திற்கு பிள்ளைகளை வழங்கிய குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்