கொரோனா வைரஸ் நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டின் சில வைத்தியசாலைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, காலி மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு அவசர நிலை பிரகடனகப்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கொரோனா நோயாளர்கள் அதிகரித்துள்ளதாலும் வைத்தியசாலையில் கடமையாற்றிய பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாலும் இவ்வாறு அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக காலி வைத்தியசாலையில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களுபோவில வைத்தியசாலையின் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 160 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சுமார் 250 கொரோனோ நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல தெல்தெனிய வைத்தியசாலை மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையிலும் கட்டில்களுக்கு அதிகமான நோயாளர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிது.

மேலும் IDH வைத்தியசாலையிலும் சுமார் 200 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அவை அனைத்திலும் நோயாளர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.