தலைவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை அவரது வீட்டில் வைத்து சற்றுமுன் சி.ஐ.டி யினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, எந்தவொரு குற்றமும் இழைக்காத அவரை கைது செய்வதற்காக, இன்று அதிகாலை 1.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரது வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.

நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்விலும் அவர் கலந்துகொண்டிருந்தார். கைது செய்வதாக இருந்தால் பாராளுமன்றத்திலோ அல்லது பாராளுமன்றுக்கு வெளியிலோ வைத்து அவரை கைது செய்திருக்கலாம்.

ஆனால், தற்பொழுது நடுநிசி வேளையில், பிடியாணை உத்தரவின்றி, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு வந்திருக்கும் சிலர் தலைவரின் வீட்டை சோதனையிட்டு, அவரை கைது செய்ய முயற்சிக்கின்றனர்.   

ஆகையால், இது ஒரு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலாகவே கருதப்படுகின்றது.