ரீலங்கா கிரிக்கெட் நடத்தும் விசேட இருபதுக்கு 20 தொடரில் எஸ்.எல்.சி கிறீன் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், எஸ்.எல்.சி ரெட்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற எஸ்.எல்.சி ரெட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

மழைகாரணமாக நேற்றைய போட்டி 15 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய எஸ்.எல்.சி கிறீன் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 115 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய எஸ்.எல்.சி ரெட்ஸ் 14.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியின் வெற்றியிலக்கை கடந்தது.