காசா பள்ளத்தாக்கில் உள்ள ஹமாஸ் குடியிருப்புகளை இலக்குவைத்து இஸ்ரேலிய வானூர்தி ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

முன்னதாக இஸ்ரேலிய எல்லை பிராந்தியத்தில் இடம்பெற்ற பரஸ்பர தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.

பாலஸ்தீனியர்கள் 24 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 13 வயதான சிறுவன் ஒருவன் உட்பட இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லை தாண்டி வன்செயலில் ஈடுபட்டதனாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.