பாலஸ்த்தீனிய – காஸா பகுதியில் உள்ள ஹாமாஸ் அமைப்பினரை இலக்கு வைத்து இஸ்ரேல் விமான தாக்குதலை நடத்தியுள்ளது.

ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேலை இலக்கு வைத்து அண்மையில் எரிப்பொருள் அடங்கிய பலூன் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே குறித்த விமான தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் இஸ்ரேல் நடத்திய குறித்த விமான தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.