ஒரே நேரத்தில் 1428 டால்பின்கள் வெட்டிக் கொல்லப்பட்டதால் அபகுதியில் உள்ள கடல் சிவப்பு நிறமாக மாறியது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பேரோ தீவில் கடந்த ஞாயிறன்று பாரம்பரிய திருவிழா என்கிற பெயரில்தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்த தீவில் இப்படித்தான் பாரம்பரிய விழா என்று ஒவ்வொரு ஆண்டும் டால்பின்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. கடலில் இருந்து இப்படி டால்பின்களை வேட்டையாடி வந்து கரையில் வெட்டிக்கொல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஞாயிறு அன்றும் அப்படித்தான் படகுகளில் சென்ற டால்பின்களை பிடித்துவந்து கரைக்கு கொண்டு வந்ததும் அவற்றின் கழுத்துப்பகுதியை அறுத்து கொலை செய்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இப்படி 1428 டால்பின்களை கழுத்து அறுத்துகொலை செய்ததால் கடற்கரைப்பகுதி கடல் நீர் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியிருக்கிறது.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருப்பதால் அவற்றைப் பார்த்த உலக முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்த மூட பழக்கத்திற்கு ஒரு முடிவு வராதா என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த காட்டுமிராண்டித்தனம் நிற்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.