நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் இணைந்து சேவையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், 200 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் தனுதம்புவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று, நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

41 வயது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் இணைந்து சேவையாற்றி வருகின்ற நிலையில் அண்மையில் ஒயாமடுவ பொலிஸ் நிலைத்தக்கு மாற்றப்பட்டிருந்தார்.

போதைப் பொருள், கஞ்சாவுக்கு அடிமையான குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், தனுதம்புவௌ பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரியுடன் நின்றுக்கொண்டிருந்த போதே நொச்சியாகம பொலிஸார் சந்தேகத்தின் பேரில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை கைதுசெய்துள்ளனர்.

அவரை சோதனைக்கு உட்படுத்தியபோது அவரிடமிருந்து 200கிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.