மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

அதிகாரிகளின் அறிக்கையின் படி, இந்த நெடுஞ்சாலையானது மே மாதத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த திட்டமானது, மீரிகம, நகலகமுவ, பொத்துஹெர மற்றும் தம்பொக்க வழியாக 39.91 கி.மீ தூரத்தில் குருணாகல் வரை செல்கின்றது.

கண்டி, குருணாகல் மற்றும் தம்புல்ல பயணிகளுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். நுழைவாயிலானது மீரிகமவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, குருணாகல் வரை செல்லும்.

25 நிமிடங்களுக்குள் மீரிகம இல் இருந்து குருணாகலினை அடைய முடியும்.