கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்  இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், மூன்றாவது தடவையாக பிற்போடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமான 10 அணிகள் பங்கேற்கும் தொழில்சார் சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடரானது மே மாதம் 2 ஆம் திகதி வரை நடத்தப்பட்டது. 

இதன்போது கொவிட் 19 அச்சுறுத்தல் மீண்டும் தலைத்தூக்கவே, போட்டித் தொடர் யூலை 2 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டிருந்தது.