எஸ் ஜே புஹாது

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த 38 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்களில் 25 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி 4 பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் இன்று கொழும்பிற்குள் பிரவேசித்திருந்தன.

இதனைத் தொடர்ந்து காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இவர்கள் காலி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் கைது சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்பில் பெரும் பதற்றநிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.