ரஸ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து விசேட விமானம் மூலம் 44 சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளதாக ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். 

நாட்டில் சுற்றுலாத் துறையை முன்னேற்ற சுகாதார நடைமுறைகளில் தளர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தனது முகநூலில் கூறியுள்ளார். 

இது குறித்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுற்றுலாதுறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ள அவர், விசா நடைமுறைகளில் மாற்றம் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.