இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3 ஆவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதற்கமைய, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 40.4 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதில் கே.எல் ராகுல், பும்ரா, சமி ஆகியோர் பூச்சியத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதிகபட்சமாக ரோகித் சர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ஓட்டங்களை பெற்றார்.

இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், ஓவர்டேன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ரொபின்சன், சாம் கரண், தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.