இலங்கையில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நாளாந்த சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலவும் நெருக்கடி நிலை காரணமாக நாட்டை விட்டு மக்கள் வெளியேறி வருவதாக தெரியவந்துள்ளது.

கடவுச்சீட்டு சேவை மற்றும் அதற்கு நிகரான 2500 டோக்கன்கள் நேற்று (27) வழங்கப்பட்டன. 

கடவுச்சீட்டு பெறுவதற்காக சிலர் வெளியில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு பெறுவதற்கு தினமும் சுமார் 2500 பேர் வரவழைக்கப்படுகின்றனர். சனக்கூட்டம் காரணமாக திணைக்கள வளாகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வெளியில் தங்கியிருந்த மக்களுக்கும் திணைக்களத்தின் பாதுகாப்புக்காகச் செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.