மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் செய்ததும் போலீசார் அந்த பெண்ணை கைது செய்ததும் கணவர் மகிழ்ச்சியடையவில்லை. பேரதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார். தன்னுடன் அந்த பெண்ணுக்கு நடந்தது முதல் திருமணம் அல்ல என்பதைக் கேட்டு அதிர்ந்து போன அவர், இது அந்த பெண்ணுக்கு 15வது திருமணம் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததும் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து போயிருக்கிறார்.
15 திருமணங்களை செய்து மோசடி செய்த கல்யாண ராணியை கைது செய்த போலீசார் அவருடன் தொடர்பு இருந்த கும்பலையும் கைது செய்து இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் போபால் பகுதியைச் சேர்ந்தவர்காந்தா பிரசாத் நாத். வெகு நாட்களாக திருமணமாகாமல் இருந்திருக்கிறார். அதனால் தனக்கு ஒரு பெண் வேண்டும் என்று எதிர்பார்த்து நண்பர்கள் உறவினர்களிடம் எல்லாம் சொல்லி வந்திருக்கிறார் . அப்போது தினேஷ் என்பவர் மூலமாக அவரின் உறவுக்கார பெண் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. உடனே பெண்பார்க்க போய் இருக்கிறார் பிரசாத்.
அந்த பெண் பூஜா என்று சொல்லியிருக்கிறார்கள். பார்த்ததும் பிரசாத்துக்கு பிடித்து விட்டது. திருமண ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன. ஊரே திரண்டு வந்து தம்பதிகளை வாழ்த்தி இருக்கிறார்கள். திருமணம் முடிந்து எட்டு நாட்கள் ஆனதும் திடீரென்று தினேஷின் மனைவி பூஜா, பிரசாத்துக்கு போன் செய்து உடம்பு சரியில்லை என்று சொல்லி இருக்கிறார். உடனே தினேஷிடம் சொல்லி பூஜாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொல்லி இருக்கிறார். மீண்டும் போன் செய்தபோது பூஜா செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்திருக்கிறது. தினேஷுக்கு போன் செய்தால் அவரின் நம்பரும் சுவிட்ச் ஆப் என்று வந்திருக்கிறது .
சந்தேகத்தில் பீரோவை திறந்த பிரசாத்துக்கு ஒரே அதிர்ச்சி. பீரோவில் இருந்த நகை பணம் எதுவுமே இல்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டோம், மனைவி என்கிற பெயரில் ஒரு திருடி வந்திருக்கிறாள் என்று நினைத்து கவலைப்பட்டிருக்கிறார் பிரசாத். உடனே போலீசில் சென்று புகார் அளித்திருக்கிறார்.
போலீசார் விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் அந்த பெண்ணை கைது செய்து விட்டார்கள். அப்போதுதான் அவர் பெயர் பூஜா இல்லை என்பதும், உண்மையான பெயர் சீமா கான் என்று தெரிய வந்திருக்கிறது.
பிரசாத்துடன் நடந்தது முதல் திருமணம் அல்ல. இது அவருக்கு 15 வது திருமணம் என்பது தெரிய வந்திருக்கிறது. கல்யாணம் என்கிற பெயரில் தாலி கட்டிக் கொண்டு முதலிரடு முடிந்ததும் நகை, பணத்துடன் ஓடி சென்று விடுவது தான் இந்த கல்யாண ராணியின் வேலையாக இருந்திருக்கிறது. ஒவ்வொருத்தரையும் திருமணம் செய்து கொள்ளும் போதும் ஒவ்வொரு பெயரில் நாடகமாடி இருக்கிறார்.
திருமணமான அன்றே முதலிரவின் போது கணவன் அசந்த நேரம் பார்த்து எஸ்கேப் ஆகி விடுவது தான் இந்த கல்யாண ராணிக்கு வழக்கமாம். ஆனால் பிரசாத் விஷயத்தில் மட்டும் அது சரியாகவில்லை. உடனே பணம், நகை எடுத்துக்கொண்டு ஓட முடியாததால் எட்டு நாட்கள் அவர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந்த மோசடி கும்பலுக்கு தலைவரான தினேஷை போலீசார் பிடித்துள்ளனர். அதன் மூலம் இந்த கும்பலில் இருந்த மூன்று பெண்கள் உள்பட 8 பேரை பிடித்துள்ளனர். மேலும் எட்டு பேர் தலைமறைவாக உள்ளனர் . அவர்களை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்