இம்முறை ஹஜ் செய்வதற்கு 1550 பேர்களுக்கு கோட்டா
கிடைத்துள்ளது.

ஏற்கனவே ஹஜ் முகவர்கள் வெளிநாட்டுச் செலாவணி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ஹஜ் ஏற்பாடுகள் செய்வதில்லை என தாமாக முடிவு எடுத்திருந்தாலும் தற்பொழுது அரசு அனுமதி வழங்கியுள்ளது.

புத்த சாசன மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கஇ சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் உற்பட ஆளும் தரப்பு முஸ்லிம் பா.உ க்கள்இ ஹஜ் முகவர்கள்இ மு.ச.க.வி திணைக்கள அதிகாரிகள் நேற்று கூடி ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.

இம்முறை ஹஜ் கட்டணம் சுமார் 23 இலட்சங்களாக இருக்கும் எனவும் அறிய வருகின்றது.

ஹஜ்ஜிற்கான சகல ஏற்பாடுகளும் ஸவூதி அரசினாலும் முதவ்வஃப் அமைப்புக்களாலும் முகவர்களாலும் மேற்கொள்ளப்படுவதனால்இ அமைச்சர்கள்இ பாரளுமன்ற உறுப்பினர்கள்இ இலங்கை அதிகாரிகள் தொண்டர்கள் எவரும் அரச செலவில் பயணிப்பதனை தவிர்த்துக் கொள்தல் வேண்டும்.

வைத்திய சேவைகள்இ வைத்திய (காப்புறுதி உற்பட) ஸவூதி அரசால் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாலும் மேலதிகமாக இலங்கை முகவர்களும் அவற்றை வழங்குவதாலும் மு.ச.க.வி திணைக்களம் இங்கிருந்து அவற்றை செய்ய வேண்டியதில்லை.

அத்தோடு மத்திய வங்கியின் அனுமதியின்றி ஹஜ்முகவர்களிடமிருந்து மேற்படி சேவைகளை வழங்குவதன் பேரில் கட்டணங்களை அறவிடுவதனை தவிர்த்துக் கொண்டால் அந்த சுமை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஹாஜிகள் மீதோ அரசின் மீதோ வரியிருப்பாளர்கள் மீதோ சுமத்தப் படமாட்டாதுஇ அது மார்க்கத்திலும் அனுமதிக்கப்படாத முறைகேடாகும்!

சவூதி அரசால் ஹஜ்ஜாஜிகளுக்கான சேவைகளை வழங்கும் முகவர்களுக்காக வரிவிதிப்புகளற்ற விஷேட ‘பிஃசா’ அனுமதிப் பத்திரங்களை முகவர்களுக்கு மாத்திரமே வழங்குவதோடு அரசியல் பிரமுகர்களுக்கோ அல்லது அவர்களது நண்பர்களுக்கோ வழங்கவும் கூடாது.

சில நாடுகளில் தனியார் ஹஜ் முகவர்கள் போல்இ அரசினால் ஏற்பாடு செய்யப்படும் குழுக்களும் பயணிக்கின்றனஇ இலங்கையில் முழுமையாக தனியார் முகவர்களே சகல ஏற்பாடுகளையும் செய்வதனால் உத்தியோக பூர்வமான சில சேவைகளைத் தவிர வேறு செலவினங்களுடன் கூடிய தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

கொன்ஸுயூலர் சேவைகளை ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸூலர் காரியாலயம் வழமை போல் வழங்கும் இன்ஷா அல்லாஹ்இ
இங்கிருந்து ஹஜ் தூதுக்குழு எனும் பெயரில் அங்கு செல்வோர் கொன்ஸல் காரியாலய வாகனங்களை அரச அனுமதியின்றி பாவிப்பது சாரதிகள் உத்தியோகத்தர்களது சேவைகளை அவர்களது செளகரியங்களுக்கு கேட்டு நிற்பது எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
முன்னாள் கொன்ஸல் ஜெனரல்
ஜித்தாஹ்இ ஸவூதி அரேபியா
08.06.2022