முன்னர் திட்டமிட்ட வகையில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.

இதனையடுத்துஇ விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.

எவ்வாறாயினும்இ குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில்இ தாம் முன்னர் திட்டமிட்ட வகையில் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.