சமகாலத்தில் இலங்கையில் நாளாந்தம் நடக்கும் படுகொலைகளின் பின்னணி குறித்து புலனாய்வு பிரிவினர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களில் 7 பேர் மர்மநபர்களால் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பாதாள உலகத் தலைவர்களின் உத்தரவுக்கு அமைய கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி இந்த கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தலுக்கு சாட்சியாக இருந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக பெருந்தொகை போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். அவர்களுக்கு துப்பு வழங்கியவர்களே தற்போது கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்தக் பட்டியலும் இன்னும் அதிகரிக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த படுகொலைகளின் பிரதான சூத்திரதாரி லண்டனில் வசிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டுபாய் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த நபர், இலங்கையிலுள்ள பிரபலமான அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக செயற்படும் ஒருவராகும். தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார். அரசியல்வாதிகள் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்வதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.