தளம்
பிரதான செய்திகள்

தம்மிக்கவுக்கு எதிரான மனு உயர்நீதிமன்றால் நிராகரிப்பு

தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தம்மிக்க பெரேரா தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்கள் மீதான விசாரணை இன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போதே குறித்த மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தம்மிக்க பெரேராவின் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்பதால் உடனடியாக அதனை இரத்துச் செய்யுமாறு இதன்போது மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

இதேவேளைஇ தம்மிக்க பெரேரா நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு பதிலாக தம்மிக்க பெரேரா தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

ராஜபக்ஷ சகோதர்களுக்கு இடையில் முரண்பாடுகள் தீவிரம்….!

Fourudeen Ibransa
1 year ago

மஹிந்த, கோட்டாபய ராஜபக்ச மீது பொருளாதார தடைகளை விதித்தது கனடா!

Fourudeen Ibransa
1 year ago

மக்கள் காங்கிரஸினால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை ஒருபோதும் பறிக்க முடியாது அலி சப்ரி அதிரடி அறிவிப்பு!

Fourudeen Ibransa
3 years ago