தளம்
முக்கிய செய்திகள்

இன்று நாட்டை வந்தடைய இருந்த 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல் தாமதமாகியுள்ளது ; எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு …!

40,000 மெட்ரிக் டன் பெற்றோல் எரிபொருள் நாட்டுக்கு
வருவதற்கு ஒரு நாள் தாமதமாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார்.

எரிபொருள் இன்று அதிகாலை வரவிருந்ததாகவும், ஆனால் தாமதமாகி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதனால் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் விநியோகிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், டீசல் கிடைக்கப்பெற்றதாகவும், நாடளாவிய ரீதியில் முழு கொள்ளளவிற்கு விநியோகிக்கப் படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட சுப்பர் டீசல் விநியோகமே காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம்.!

Fourudeen Ibransa
2 years ago

போராட்டத்தின் பின்னணியில் ‘அரபு வசந்தம்’ – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

Fourudeen Ibransa
2 years ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு.!

Fourudeen Ibransa
2 years ago