இலங்கையின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த 20 மில்லியன் டொலர் கூடுதல் உதவியாக வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.

இன்று நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமெரிக்க ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைக்கு 20 மில்லியன் டொலர் கூடுதல் உதவி வழங்குவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருப்பது, உணவுப் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் அனைத்து இலங்கை மக்களின் பொருளாதார நல்வாழ்வுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நிரூபிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் குறிப்பிட்டார்.