இலங்கை திவாலாகியுள்ளதுடன், நெருக்கடியிலிருந்து மீளத் தயாராக இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஒப்புக் கொண்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு உட்பட இலங்கை கடுமையான பற்றாக்குறை மற்றும் மந்தநிலை ஏற்படும் என பிரதமர் கணித்துள்ளார். ‘இலங்கை 2023 ஆம் ஆண்டிலும் சிரமங்களை எதிர்கொள்ளும் என்பது தான் உண்மை என்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் ஒகஸ்ட் மாதத்திற்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கமைய சர்வதேச நாணய நிதியத்தின் முடிவு சார்ந்துள்ளது. தாம் இப்போது ஒரு திவாலான நாடாக பேச்சுவார்த்தைகளில் நுழைவதாகவும்,. நாடு திவாலாகிவிட்டதால், தமது கடனின் நம்பகத்தன்மை குறித்த திட்டத்தை தனித்தனியாக அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் திருப்தி அடைந்தால் மட்டுமே ஒரு உடன்பாட்டை எட்ட முடியும். கடந்த வாரம், சர்வதேச நாணய நிதியம் நாட்டின் நிதிநிலையை சரிசெய்வதற்கும், அதன் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்கும் இன்னும் வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது’ என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.