பிரான்ஸில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் மீண்டும் உயிர்பெற்ற அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சஒன்எ – லுஆர் (Saône-et-Loire) மாவட்டத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள ஏரியில் மிதந்துக்கொண்டிருந்த பெண்ணிற்கு 40 நிமிடங்கள் கார்டியாக் மசாஜ் செய்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

கடந்த வாரம் ஏரி அமைந்துள்ளதாக பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் எரியில் பெண் ஒருவர் மிதப்பதனை அவதானித்தள்ளார்.

உடனடியாக அவரை மீட்டுள்ளதுடன், அவசர பிரிவுகளுக்கு தகவல் வழங்கியுள்ளார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரும் வரையில் குறித்த முன்னாய் அதிகாரி 10 நிமிடங்கள் முதலுதவி சிகிச்சையாக கார்டியாக் மசாஜ் செய்துள்ளார்.

சம்பவ இடத்தை வந்தடைந்த மருத்துவ குழுவினர் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் கார்டியாக் மசாஜ் செய்துள்ளனர். எனினும் அவரது இதய துடிப்புகள் நின்றமையினால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்தவர்கள் உறுதி செய்தனர். சாதாரணமாக உயிரிழந்த ஒருவர் காணப்படும் நிலைமையிலேயே அவர் காணப்பட்டுள்ளார்.

வாய்வழியாக ஊதி ஒட்சிசன் வழங்கப்பட்டது. எனினும் அவரிடமிருந்து எவ்வித அசைவுகளும் இல்லாத நிலையில் மரணம் உறுதி செய்யப்பட்டு மரண சான்றிதழ் தயாரிக்கப்பட்ட நிலையில் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன் போதே இடையில் அவர் உயிருடன் எழுந்துள்ளார்.

அத்துடன் அவர் பல மணி நேரங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், இவ்வாறு நீண்ட நேரத்திற்கு பின்னர் ஒருவர் மீண்டு வரும் சம்பவங்கள் மிக மிக அரியதென பல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த பெண்ணை கோமா நிலைக்குட்படுத்தி சிகியளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.