இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை அனுப்புமாறு BJP கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரிந்துரைத்துள்ளார்.

அவர் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இத்தகைய சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும்? என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்தகைய சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும்?  

அப்போது நமது சுற்றுப்புறத்தில் உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது.  

ராஜபக்ஷவுக்கு இந்தியாவின் ராணுவ உதவி வேண்டுமானால் நாங்கள் கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.