இன்று கோட்டாபய ராஜனாமாச் செய்வதாக இருந்தது.எனது முன்னையை பதிவில் குறிப்பிட்டது போல ஜனாதிபதி ராஜனாமாச் செய்தால், புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் ஒரு மாத காலத்திற்குள் தெரிவு தெரிவு செய்ய வேண்டும். அதுவரைக்கும் பிரதமர் அதிக பட்ஷம் முப்பது நாட்களுக்கு ஜனாதிபதியாக இருப்பார். அரசியல் யாப்பின் சரத்து 40 சொல்லும் விடயம் இதுதான்.

ஆனால் இன்று நடந்திருப்பதோ முற்றிலும் வேறான ஒன்று. இதனைப் புரிய அரசியல் யாப்பின் சரத்து 37 என்ன என்பது எமக்குத் தெரிய வேண்டும்.

சரத்து 37(1)ந் பிரகாரம் ஜனாதிபதி சுகயீனம், நாட்டில் இல்லாமை அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக பிரதமரை பதில் ஜனாதிபதியாக நியமிக்கலாம் என்று கூறுகிறது.

கோட்டாபய இதைத்தான் இப்பொழுது செய்திருக்கிறார்.அதாவது ராஜனாமாச் செய்யாமல் இலங்கையில் தான் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் ரணிலை பதில் ஜனாதிபதி ஆக்கி இருக்கிறார்.உத்தியோம பூர்வ கடிதம் வந்தால் ரணில் ஜனாதிபதியாகி விடுவார்.

இதன் விளைவு என்னவென்றால் பாராளுமன்றத்தில் புது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேவை இனி இருக்காது.ரணில் 30 நாட்களுக்கு ஜனாதிபதியாக மட்டும் இருக்கப்போவதில்லை.கோட்டாவின் எஞ்சிய காலத்திற்கு ஜனாதிபதியாக இருக்கலாம்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் முகங்களில் கரி பூசிய தருணம் இது.இந்த அதிகார வெறி நாட்டை விட்டு ஓடியும் கோட்டாவை விட்டு ஓடவில்லை.வீட்டை உடைத்தும் ரணிலை விட்டுப் போகவில்லை.

இனி ஓடப்போவது அப்பாவி மக்களின் இரத்தம்தான்.