ஜேர்மனி முதலான ஐரோப்பிய நாடுகள் எரிவாயு தேவையை என்ணி பயப்படவேண்டும் என திட்டமிட்டார் ரஷ்ய ஜனாதிபதி புதின். அவரது திட்டம் நிறைவேறிவிட்டது என்றே தோன்றுகிறது.

இலங்கையில் உணவுபொருட்கள் மற்றும் பெட்ரோல் முதலான பொருட்களின் விலை விண்ணைத்தொட, மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் ஒரு நிலை உருவாகியுள்ளது.இதேபோன்ற ஒரு நிலையைத்தான் புதின் ஐரோப்பாவின் மையப்பகுதியிலும் உருவாக்க முனைகிறார் என்றே தோன்றுகிறது.

உதாரணமாக ஜேர்மனியைச் சொல்லலாம்.The Nord Stream 1 pipeline என்னும் திட்டத்தின்படி, Gazprom என்னும் எரிவாயு நிறுவனம், ஜேர்மனிக்கு குழாய் வழியாக எரிவாயு அனுப்பி வந்தது.ஆனால், வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்கவிருப்பதாகக் கூறி, அந்த எரிவாயு வழங்கலை Gazprom நிறுவனம் நிறுத்தியுள்ளது.ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து உருவான பிரச்சினைக்கு பதிலடி கொடுப்பதற்காக திட்டமிட்டே எரிவாயு வழங்கலை ரஷ்யா நிறுத்தியிருக்கலாம் என கருதும் ஜேர்மனிக்கு, மீண்டும் ரஷ்ய நிறுவனம் எரிவாயுவை வழங்கலைத் தொடருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Gazprom

ஏற்கனவே, சென்ற மாதம் Nord Stream 1 திட்டத்தின் கீழ் குழாய் மூலம் வழங்கும் எரிவாயுவின் அளவை 60 சதவிகிதமாக குறைத்துவிட்டது ரஷ்யா.தனது எரிவாயு வழங்கும் அமைப்பிலுள்ள கருவி ஒன்று பழுதாகிவிட்டதால்தான் எரிவாயுவின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த Gazprom நிறுவனம், அந்தக் கருவியை சரி செய்வதற்காக கனடாவுக்கு அனுப்பியுள்ளதாகவும்,ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அந்த கருவியை ரஷ்யாவுக்கு திருப்பிக் கொடுக்க இயலாது என்று கனடா கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அந்தக் கருவியை ரஷ்யாவிடம் ஒப்படைக்குமாறு ஜேர்மனி கனடாவை வற்புறுத்துகிறது. உக்ரைனோ, அதை ரஷ்யாவுக்குக் கொடுக்கக்கூடாது என கனடாவை வலியுறுத்துகிறது.அப்படி கனடா அந்தக் கருவியை ரஷ்யாவிடம் ஒப்படைக்குமானால், அது மாஸ்கோ மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறும் செயலாகும் என்கிறது உக்ரைன்.

Gazprom

இப்படி ஒரு பிரச்சினை நடந்துவரும் நிலையில் இந்த எரிவாயு வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் எரிவாயு வழங்கல் தொடருமா என்பதில் ஜேர்மனிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.ஆக, எரிவாயுவுக்கு என்ன செய்வது என்ற ஒரு பதற்றம் உருவாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. இப்படி ஒரு நிலைமையைத்தான் ஐரோப்பாவில் உருவாக்க புதின் விரும்புகிறார்.

Gazprom

எதிர்பார்ப்புக்கேற்ப ஜூலை 21ஆம் திகதி மீண்டும் ரஷ்யாவிலிருந்து ஒருவேளை மீண்டும் எரிவாயு வழங்கல் துவங்கக்கூடும்.ஆனாலும், ஏற்கனவே ஏற்பட்ட இழப்பை சரி செய்ய முடியாது. ஆக, புதின் தனது இலக்கை அடைந்துவிட்டார் என்றே கூறலாம்!