ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது. 

பாசிச ரணில் விக்கிரமசிங்க உதைத்து விரட்டப்பட்ட வேண்டும் என அதன் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட சுட்டிக்காட்டுகிறார்.

ரணில் விக்கிரமசிங்கவை யாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் தொடர்ந்தும் செயற்பட்டால் மிக மோசமான நிலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக வரப்போவது அரசியல் ஸ்திரத்தன்மையல்ல, உள்நாட்டு யுத்த சூழ்நிலையே என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் காரணமாக இலங்கையில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். 

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.