நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்து சமந்தா பங்கேற்றிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. 

இந்நிகழ்சியில் தொடக்கத்தில் சமந்தாவை அலேக்காக தூக்கிவரும் அக்‌ஷய்குமாரை குறிப்பிட்டு, அவர் உங்களை பாதுகாப்புடன் தூக்கிக் கொண்டு வந்தார் என கரண் ஜோஹர் சொல்ல, நான் அது பற்றி எந்த புகாரும் சொல்லலயே? என சமந்தா சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.

பின்னர் சமந்தா, அக்‌ஷய் குமாருடன் இணைந்து நடனம் ஆடினார்.

இந்த நிகழ்ச்சி ஜூலை 21ம் திகதி ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.