இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அல்லது பிற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளன.

டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றில் இதனை அறிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அங்கு கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அவர்களுக்கு எவ்வாறு தலையீடு செய்வது என்பது தொடர்பில் செயற்படுவதற்கு இந்தப் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், மும்பையில் உள்ள துணை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகம் ஆகியவை இந்தப் பதிவுக்காக இலவச இணைய வசதிகளை வழங்கியுள்ளன.

மேலும், இலங்கை மாணவர்கள் தாங்கள் கல்வி கற்கும் மாநிலத்திற்கு ஏற்ப தங்களது விபரங்களை உள்ளிட வேண்டும்.

குறித்த அறிக்கையின் ஊடாக உயர்ஸ்தானிகராலயம் நாட்டில் உள்ள அவர்களது பெற்றோரிடம் இது தொடர்பில் தமது பிள்ளைகளுக்கு அறிவிக்குமாறு“ கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கான பதிவுகளை https://www.slhcindia.org/ மற்றும் https://www.sldhcchennai.org/ என்ற இணையதளங்கள் மூலம் மேற்கொள்ள முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளது.