255 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் வேட்பாளர் புதிய அதிபராக தெரிவு செய்யப்படுவார்.

நாடாளுமன்றத்தில் இலங்கை மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால் அக்கட்சி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

அத்தோடு இலங்கை மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜி.எல்.பிரீஸ் அணியினர் முன்னாள் மந்திரி டலஸ் அழகப் பெருமாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அதனை தொடர்ந்து ஆளுங்கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில் இன்று ஜனாதிபதி தேர்வு நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றால் அவர்களை தடுக்கவும் கலைந்து செல்லவும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

கலவரத் தடுப்பு பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இ கொழும்பு மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசும் குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் ரணில் விக்மரசிங்கவுக்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.