பாராளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள வாக்களிப்பின் போது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் செய்தியை பதிவிட்டுள்ள அவர், டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.