ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களாணையை மனதிலிருத்திச் செயற்பட வேண்டும் என போராட்டக்காரரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த போராட்டத்தில் மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். 

இதேவேளை காலிமுகத்திடல் பகுதியில் பிரம்மாண்ட திரையில் நாடாளுமன்ற அமர்வு நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது. 

Gallery