இலங்கை பொது மக்களை போல் பாகிஸ்தான் பொது மக்களும் விரைவில் வீதிகளில் இறங்குவார்கள் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த குறிப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஆசிப் சர்தாரி மற்றும் ஷரீப் குடும்பத்தின் தலைவர்களை கொண்ட மாஃபியா, நாட்டை மூன்று மாத காலத்திற்குள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மண்டியிட செய்து விட்டது எனவும் இம்ரான் கான் கூறியுள்ளார்.

மக்கள் இதனை தொடர்ந்தும் அனுமதிக்க மாட்டார்கள். இலங்கையில் போன்று பாகிஸ்தான் பொது மக்களும் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஆசிப் சர்தாரி மற்றும் ஷரீப் குடும்பத்தின் தலைவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானை கொள்ளையடித்து சட்டவிரோாதமாக சேர்த்த சொத்துக்களை பாதுகாக்க இவர்கள் நாட்டை மண்டியிட வைத்துள்ளனர்.